உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்

டூவீலர் மீது சரக்கு வேன் மோதி தந்தை - மகன் பலியான சோகம்

திருப்பூர், ; திருப்பூரில் சரக்கு வேன் டூவீலர் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.திருப்பூர், எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் திருமலைசாமி, 53; கட்டட தொழிலாளி. இவரது மகன் ஜீவானந்தம், 29; பனியன் தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் இரவு பெருமாநல்லுாரில் இருந்து வாவிபாளையம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.கூலிபாளையத்தில் இருந்து பெருமாநல்லுார் நோக்கி சரக்கு வேன் சென்றது. வேனின் ஒரு பகுதி கதவு முழுமையாக மூடப்படாமல், பின்னால் இருந்த கொக்கியில் மாட்டப்பட்டு இருந்தது. டூவீலரில் சென்ற இருவர் மீது, கதவு பகுதி மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயமடைந்தனர். அதே இடத்தில் தந்தை பரிதாபமாக இறந்தார்.மகனை மீட்டு கோவைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருமுருகன்பூண்டி மற்றும் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை