உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரயில்கள் இயக்கம் ஜூன் 7ல் மாற்றம்

 ரயில்கள் இயக்கம் ஜூன் 7ல் மாற்றம்

திருப்பூர்: கிருஷ்ண ராஜபுரம் - ஒயிட்பீல்டு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் வந்தே பாரத், கொங்கு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 7ம் தேதி, கோவை - நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) சேலத்தில் இருந்து கிருஷ்ணராஜபுரம் செல்லாமல், சேலம் - திருப்பத்துார் - ஜோலார்பேட்டை - ரேணிகுண்டா வழியில் இயக்கப்படும். பெங்களூரு -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (எண்:16526) கிருஷ்ணராஜபுரம், ஒயில்பீல்ட், மாலுார், பங்காரப்பேட்டை, குப்பம், திருப்பத்துார் வழக்கமான வழித்தடத்தை தவிர்த்து, பெங்களூரு - பையப்பனஹள்ளி, ஓசூர், தர்மாவரம், சேலம் வழியில் இயங்கும். எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில், (எண்:26652) சேலத்தில் இருந்து கிருஷ்ணராஜபுரம் செல்லாது. சேலத்தில் இருந்து ஓமலுார், ஓசூர், பையப்பனஹள்ளி வழியாக பெங்களூரு செல்லும். மறுநாள் (ஜூன் 8 ம் தேதி) பெங்களூருவில் இருந்து புறப்படுகையில் கிருஷ்ணராஜபுரம் வராமல், பையப்பனஹள்ளி, ஓசூர், சேலம்வழியில் பயணிக்கும். 'பயணிகள் முன்கூட்டியே ரயில்கள் இயக்க மாற்றம் குறித்த தகவலை அந்ததந்த ரயில்வே ஸ்டேஷன் தகவல் மையத்தில் அறிந்து அதன் பின் பயணத்தை தொடரலாம்' என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை