மேலும் செய்திகள்
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில்நாளைஅப்ரன்டிஷிப் தேர்வு
18-Feb-2025
திருப்பூர்; சென்னை மாநகர போக்குவரத்து கழக ஐ.டி.ஐ., பிரிவில், தொழில் பழகுனர்களுக்கான சேர்க்கை முகாம், ஏப்., 2ம் தேதி நடைபெற உள்ளது.சென்னை, குரோம்பேட்டையில் உள்ள, மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில், ஏப்., 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதியான தொழில்பழகுனர்களை தேர்வு செய்யும் முகாம் நடக்க உள்ளது.மெக்கானிக் மோட்டார் வெய்கிள் -120, மெக்கானிக் டீசல் - 60, எலக்ட்ரீசியன் - 30, ஆட்டோ எலக்ட்ரீசியன் - 35, வெல்டர் -19, பிட்டர் - 40, டர்னர் -1, பெயின்டர் -22 என, மொத்தம், 300 இடங்களுக்கான தொழில் பழகுனர் சேர்க்கை நடக்க உள்ளது.ஒவ்வொரு பிரிவிலும், மாதம், 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழில் பழகுனர் பயிற்சிக்கான காலியிடங்களை நிரப்பும் வகையில், சிறப்பு முகாம் நடக்கிறது.ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்று, பயன்பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
18-Feb-2025