உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திடக்கழிவு மேலாண்மை குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி

 திடக்கழிவு மேலாண்மை குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி

திருப்பூர்: தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் போரம் என்ற தன்னார்வ அமைப்பு திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு பகுதிகளிலும், ஈடுபட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இவ்வமைப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கி வருகிறது. அவ்வகையில், காங்கயம் மற்றும் வெள்ளகோவில் ஆகிய நகராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெள்ளகோவில் நகராட்சியில், 10 டன் அளவிலான குப்பை கழிவுகள் தரம் பிரிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கயம் நகராட்சியில், எட்டு டன் அளவிலான கழிவுகள் உள்ளன. இவ்விரு நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையில், பணியாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு இல்லை. இதனால், குப்பை தரம்பிரிப்பது உள்ளிட்ட பணிகளில் தேக்க நிலை காணப்படுகிறது. அங்கு ஆய்வு மேற்கொண்ட வல்லுநர்கள் வீரபத்மன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் நகராட்சி கமிஷனர்கள் மனோகரன் மற்றும் பால்ராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில், துாய்மைப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி