மேலும் செய்திகள்
டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
05-Sep-2025
திருப்பூர்; பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 1 முதல், 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான, இரண்டாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது. அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் நடந்த பயிற்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கவுசல்யாதேவி வரவேற்றார். நிறுவன முதல்வர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்தில் உள்ள மாற்றங்கள், மாநில அடைவு ஆய்வு வினாக்கள், பகுப்பாய்வு மற்றும் எண்ணும் எழுத்தில் உள்ள செயல்பாடுகள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி கருத்தாளர்களாக, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார், விரிவுரையாளர் சுகுணா, மூலனுார் ஒன்றிய ஆசிரிய பயிற்றுனர் சக்திவேல் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் செய்திருந்தனர். 8 ஒன்றியங்களைச் சேர்ந்த வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள், 48 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.
05-Sep-2025