உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம்; உடனே மாற்ற வலியுறுத்தல்

டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம்; உடனே மாற்ற வலியுறுத்தல்

பொங்கலுார்; பொங்கலுார் வலுப்பூரம்மன் கோவிலில் இருந்து கொடுவாய் - நாச்சிபாளையம் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. அந்த சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், தார் ரோட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் சரக்கு வாகனங்கள் பாரம் ஏற்றிச்செல்லும் போது டிரான்ஸ்பார்மரில் உரசும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் செல்லும்போது பீதியுடன் அவ்விடத்தை கடந்து செல்கின்றனர். சில ஆண்டு முன் அவ்வழியாக தட்டு ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அது போன்ற நிலை வருங்காலத்தில் ஏற்படக்கூடாது; உடனடியாக டிரான்ஸ்பார்மரை அகற்றி ரோட்டில் இருந்து சற்று தொலைவில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !