வெட்டப்படும் மரங்கள்
பல்லடம்: பல்லடம்- - தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையின் பல இடங்களில், தனியார் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.ரோட்டோரங்களில் உள்ள மரங்கள், விளம்பர பேனர்களை மறைப்பதாக கூறி, நீண்ட காலமாக வளர்ந்துள்ள பசுமையான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால், நிழல் தரும் மரங்கள், கிளைகளை இழந்து மொட்டையாக உள்ளன.''விளம்பர பேனர்கள் மறைக்கும் என்ற காரணத்துக்காக, சுயநலத்துடன், அனுமதியின்றி மரங்களை இதுபோன்று வெட்டுவது, பசுமை பணிக்கு எதிரானது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இது குறித்து கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் உள்ளனர்'' என்கின்றனர் பொதுமக்கள்.