உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரோட்டிலேயே வெட்டப்பட்ட மரங்கள் அலட்சியம் விபத்துகளுக்கு அடிகோலும்

 ரோட்டிலேயே வெட்டப்பட்ட மரங்கள் அலட்சியம் விபத்துகளுக்கு அடிகோலும்

சேவூர்: அவிநாசி அடுத்த சேவூரில், கைகாட்டி பிரிவிலிருந்து கோபி செல்லும் ரோட்டில் வலையபாளையம் வரை 2.4 கி.மீ. நீளத்துக்கு, 7 மீட்டர் அகலம் உள்ள ரோட்டின் அகலத்தை 10 மீட்டராக மாற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதில், கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை முதல் கட்டமாக நான்கு வழி சாலை அமைக்கும் பணிகளும், அதை தொடர்ந்து, வளையபாளையம் வரை குறுகிய ரோட்டை அகலப்படுத்துவதற்கான பணிகளும் நடக்கின்றன. இப்பணிகள், 4.70 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது. ரோட்டில் இருபுறத்திலும் உள்ள உள்ள, 160 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. வெட்டப்படும் மரங்களை ரோட்டோரம் போட்டு வைப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் டூ வீலர், கார் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்களுக்கு பனிமூட்டம் காரணமாக வெட்டப்பட்ட மரங்கள் ரோட்டில் இருப்பது தெரியாமல் விபத்துகள் நிகழ்கின்றன. சாலை பணிகள் நடைபெறுகிறது என வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்யும் விதமாக பிளக்ஸ் பேனர்கள், இரவில் ஒளிரும் ரிப்ளெக்ட்டர்கள் வைக்கப்படவில்லை. மரங்களை கொண்டு செல்ல பொக்லைன் இயந்திரம், லாரிகள் ரோட்டிலேயே நிறுத்தி பணிகளை மேற்கொள்வதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். --- சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள், அகற்றப்படாமல் ரோட்டிலேயே கிடக்கின்றன. அறிவுறுத்தப்படும் கடந்த ஓரிரு நாட்களாக மரங்கள் வெட்டும் பணி துவங்கியுள்ளது. உரிய முறையில் ஒப்பந்ததாரரிடம் மரங்களை ரோட்டோரம், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும். சாலை பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கை வாசகங்கள், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆகியவையும் அமைக்கப்படும். - செங்குட்டுவேல், உதவிக்கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, அவிநாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி