மேலும் செய்திகள்
வணிகர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
04-Sep-2024
அவிநாசி: அவிநாசியில், சூளை பஸ் ஸ்டாப்பில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சாலையோர கடைகளை முறைப்படுத்த கேட்டு, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் சங்கம் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் மற்றும்இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் (பொறுப்பு) முன்னிலையில் நடைபெற்றது.அவிநாசி அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் கார்த்திகேயன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ரவி ஆகியோர் தங்கள் தரப்பு விஷயங்களை வலியுறுத்தினர். அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் பேசுகையில், ''நாளை (இன்று) சாலை ஓரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருபவர்களை முறைப்படுத்தவும், புதியதாக வரும் கடைக்காரர்களை அனுமதிக்க கூடாது. வரும் வாரத்தில் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்திடவும்,தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள், துணிக்கடைகள், ஆகியவற்றை உரிய கால நேரத்தில் மட்டும் செயல்பட வேண்டும்,'' என்றார்.---சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக, தாலுகா அலுவலகத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
04-Sep-2024