மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி
11-Mar-2025
உடுமலை; பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது.பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி விளையாட்டு விழா, பெண் கல்வி பாதுகாப்பு, போக்சோ சட்டம் விழிப்புணர்வு குறித்து முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார்.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், 'போக்சோ' சட்டம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஆண்டியகவுண்டனுார் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பெண் கல்வி பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார். மாணவர்களுக்கு பந்து எறிதல், லக்கி கார்னர், ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், பலுான் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சுதா நன்றி தெரிவித்தார்.
11-Mar-2025