உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

உடுமலை; உடுமலை அருகே, அனுமதி சீட்டு இல்லாமல், கருங்கற்களை ஏற்றி வந்த லாரிகளை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இருந்து உரிய அனுமதி இல்லாமல், கனிமவளங்கள் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், நேற்று கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான குழுவினர், மைவாடி அருகே நான்கு வழிச்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, கருங்கற்களை ஏற்றி வந்த இரு லாரிகளை தணிக்கை செய்த போது, உரிய அனுமதி இல்லாமல், பழநி, சின்னகலையமுத்துாரில் இருந்து இடையர்பாளையத்துக்கு கருங்கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிஎன் 99 ஏசி 6213; டிஎன் 99 ஏசி 2545 பதிவு எண் உள்ள லாரிகளை பறிமுதல் செய்து, மடத்துக்குளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரி டிரைவர்கள், மணிகண்டன், 28; சமீர், 35 ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ