காசநோய் விழிப்புணர்வு வீடியோ
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, சுகாதாரத்துறை சார்பில், சினிமா தியேட்டர்களில், காசநோய் தடுப்பு வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.ஸ்ரீசக்தி சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சக்தி சுப்பிரமணியத்தை சந்தித்த சுகாதாரத்துறையினர், விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஸ்ரீசக்தி சினிமாஸ் தியேட்டரில் உள்ள, எட்டு திரைகளிலும், 46 காட்சிகளின் போதும், காச நோய் தடுப்பு விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழிப்புணர்வு வீடியோ பயனுள்ளதாக இருந்ததாக, சினிமா பார்க்க வந்திருந்த மக்கள் தெரிவித்தனர்.