சுரங்க பாலம் மாற்று வழி ஆய்வு
திருப்பூர் : நகரின் மையப் பகுதியில், வெள்ளி விழா பூங்கா ரோட்டையும், யுனிவர்சல் சந்திப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் சுரங்க பாலம் கட்டப்படுகிறது. தற்போது குமரன் ரோட்டுக்கு கீழ் பகுதியில் சுரங்கம் தோண்டி, கட்டுமானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணியின் போது, பாலம் மீது வாகனப் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிட வேண்டியுள்ளது. இதற்காக, வாகனப் போக்குவரத்தை திருப்பி விடுவது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்தது. போக்குவரத்து போலீசாரும் நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து இந்த ஆய்வை நேற்று நடத்தினர். இதற்காக ரோட்டின் அளவுகளை கணக்கிட்டு, கனரக வாகனங்கள் சென்று திரும்ப வசதியாக உள்ளதா என்பதைக் டிரோன் கேமரா கொண்டு ஆய்வு நடந்தது.