மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
18-Jun-2025
பொங்கலுார்; விலை உயர்ந்தாலும், குறைந்தாலும், நம்பிக்கையுடன் மஞ்சள் பயிர் சாகுபடியை விவசாயிகள் தொடர்கின்றனர்.பணப்பயிரான மஞ்சள் ஓராண்டு பயிராகும். பெயின்ட் தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு உபயோகங்களுக்கு மஞ்சள் பயன்படுகிறது.வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து உற்பத்திச் செலவை விவசாயிகள் ஈடு கட்டுகின்றனர்.முன்பெல்லாம் மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. சமீபத்திய ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை, போதிய விலை இன்மை, ஆட்கள் கூலி, இடுபொருள் விலை உயர்வு போன்றவற்றால் மஞ்சள் விவசாயம் கட்டுப்படியானதாக இல்லை.கடந்த, 2010ம் ஆண்டுக்குப் பின் சமீப காலமாக சில ஆண்டுகளாக தான் ஓரளவு மஞ்சளுக்கு விலை கிடைக்கிறது. தற்போது ஒரு குவின்டால், 13 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. நிலையற்ற விலை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தாலும் இன்றும் நம்பிக்கையுடன் பலர் மஞ்சள் சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
18-Jun-2025