சிறுமி உட்பட இருவர் ஆற்றில் மூழ்கி பலி
திருப்பூர்: தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சுல்தானிய பள்ளி வாசல் வீதியை சேர்ந்தவர் பரூக், 37. இவரின் உறவினர் திருமணம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த உறவினர்கள், மதியம் செல்லம்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, ஆற்றில், பரூக்கின் உறவினர் முகமது ஹசன், 32, இவரது அண்ணன் மகள் ரமலான் பேஹம், 13, ஆகியோர் நீரில் மூழ்கினர். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.