உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உதயநிதி பிறந்த நாள் விழா; தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

உதயநிதி பிறந்த நாள் விழா; தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில், தமிழக துணை முதல்வரும், இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.அவ்வகையில், திருப்பூர் மாநகர் மாவட்ட விவசாய அணி சார்பில், நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் முதல் கட்டமாக 14 குழந்தைக்கு, தலா 4,000 ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், வடக்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரத்தினசாமி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் திலக்ராஜ், ஆறுச்சாமி, மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநகராட்சி, 22 வது வார்டு தி.மு.க சார்பில், நடந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ராகன்யா ரிஹோப் சென்டர் சிறப்பு குழந்தைகளுக்கு வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், இனிப்பு வழங்கினார். வார்டு செயலாளர் ராஜ்குமார், டாக்டர் பார்த்திபன் மற்றும் காயத்ரி, எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை