உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உஜ்வாலா திட்டம் விழிப்புணர்வு அவசியம்

உஜ்வாலா திட்டம் விழிப்புணர்வு அவசியம்

திருப்பூர்; மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். காஸ் நுகர்வோர், நுகர்வோர் சங்க கூட்டமைப்பினர் பங்கேற்று, பிரச்னைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கை;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு கெரசின் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தேதியில், எத்தனை லிட்டர் கெரசின் வழங்கப்படுகிறது என்ற விவரங்களை வெளியிட வேண்டும். ஒவ்வொரு ரேஷன் கடைகளையும் கண்காணித்து, ஜி.பி.எஸ்., கேமராவில் புகைப்படம் எடுத்து, கெரசின் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்.ஏழை குடும்பங்களுக்காக மத்திய அரசு, உஜ்வாலா திட்டத்தை செயல்பத்தி வருகிறது. இத்திட்டத்தில், இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில், இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாவட்டத்திலுள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு, உஜ்வாலா திட்டத்தில், இலவச காஸ் இணைப்பு மற்றும் மானிய சிலிண்டர் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை