உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடை நாளிலும் தடையற்ற விற்பனை

தடை நாளிலும் தடையற்ற விற்பனை

பல்லடம்; குடியரசு தினமான நேற்று மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட போதும், மறைமுக மது விற்பனை தாராளமாக நடந்தது. விடுமுறை நாட்களில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்ற உத்தரவு இருந்தாலும், துாய்மை பணி, பராமரிப்பு என, பல்வேறு காரணங்களை கூறி, மதுக்கடை கேட் திறந்தே வைக்கப்படுகின்றன. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து, அதிக லாபம் பார்க்கின்றனர். இந்நாட்களில், கட்டாயம் மதுக்கடைகளுக்கு பூட்டு போடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ