மேலும் செய்திகள்
எத்தனை காலம்தான் அரசு பஸ்சுக்காக காத்திருப்பு?
19-Oct-2024
பல்லடம்: பண்டிகை தினத்திலும் டூவீலர் ஸ்டாண்ட் திறக்கப்படாததால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.பல்லடம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி டூவீலர் ஸ்டாண்ட் உள்ளது. வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், அரசு தனியார் ஊழியர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் என, தினசரி ஏராளமானோர் டூவீலர்களை நிறுத்தி பயனடைந்து வருகின்றனர்.சேதமடைந்த பழைய ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு, 59 லட்சம் ரூபாய் செலவில், புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இது, திறப்பு விழா செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பயன்பாட்டுக்கு விடப்படாமல் உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள், சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, டூவீலரில் வந்து, பஸ் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு பஸ் ஏறி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நகராட்சி டூவீலர் ஸ்டாண்ட், திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராததால், அருகிலுள்ள இதர தனியார் டூவீலர் ஸ்டாண்டுகளில், வாகனங்கள் நிறுத்தப்பட்டன.இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு என்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகளும் தேவையற்ற அலைச்சலுக்கு ஆளாகினர். எனவே, இனியும் தாமதப்படுத்தாமல், டூவீலர் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19-Oct-2024