உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசன கால்வாய் பராமரிப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

பாசன கால்வாய் பராமரிப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

உடுமலை, ; புதுப்பாளையம் கிளை வாய்க்காலில், தண்ணீர் திறப்புக்கு முன்னர், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், புதுப்பாளையம் கிளை வாய்க்கால் வாயிலாக, இரண்டு மற்றும் நான்காம் மண்டல பாசனத்தில், 14 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் நான்காம் மண்டல பாசனத்தில், 7 ஆயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெற உள்ளது.இந்நிலையில், கால்வாயின் பல இடங்களில், கரைகள் சேதமடைந்து, கான்கிரீட் இடிந்து விழுந்துள்ளது. குறிப்பாக, பகிர்மான வாய்க்காலுக்கு, தண்ணீர் திறக்கும், ஷட்டர் பகுதி, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், பாசன காலத்தில் நீர் விரயம் ஏற்படுகிறது.இதனால், கடைமடை பகுதியில், மக்காச்சோளம் உட்பட சாகுபடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு கேட்டு, பொதுப்பணித்துறை சார்பில், ஆண்டுதோறும் கருத்துரு அனுப்பபடுகிறது.இருப்பினும், நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தண்ணீர் திறப்புக்கு முன் அடிப்படை பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும்.மாறாக, தண்ணீர் திறப்புக்கு முந்தைய நாள், கால்வாய் கரையிலுள்ள புதர்களை மட்டும் அகற்றும் நடைமுறையை பொதுப்பணித்துறையினர் கைவிட்டு, கோரிக்கை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !