உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.11.71 கோடிக்கு காய்கறி விற்பனை 

உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.11.71 கோடிக்கு காய்கறி விற்பனை 

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில், 11.71 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.திருப்பூர், வடக்கு உழவர் சந்தையில், ஜூன் மாதத்தில், 832 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகியுள்ளது; இதன் மூலம், 3.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. விளைபொருட்களை, 3,210 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, ஒரு லட்சத்து, 4 ஆயிரத்து, 135 பேர் வந்துள்ளனர்.ஜூன் மாதத்தில், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 2,170 டன் காய்கறி வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளைபொருட்களுடன், 6,835 விவசாயிகளும், 1.27 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர். முப்பது நாட்களில், எட்டு கோடியே, 41 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. ஜூன் மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 11.71 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:வைகாசி மாத பிறப்பு, சுபமுகூர்த்த நாட்களில் விற்பனை ஜோராக இருந்தது. ஆனி மாத துவங்கியதற்கு பின் சற்று குறைந்தது. தற்போது, காய்கறி விலை அதிகமும், குறைவும் இல்லாமல், ஒரே நிலையில் (கிலோ 30 - 60) உள்ளதால், அதிகளவில் பொருட்களை வாங்கி இருப்பு வைக்க பலரும் விரும்புவதில்லை. விசேஷ தினங்கள் குறைவால், விற்பனை குறைவாகத்தான் உள்ளது. காய்கறி, மளிகை மொத்த வியாபாரிகளும் குறைந்தளவு காய்கறி வாங்குகின்றனர். ஜூன் முதல் வாரம் பள்ளி திறப்பின் போது இருந்த சுறுசுறுப்பு, மாத இறுதியில் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை