உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாறுமாறு வாகனங்கள் தடுமாறும்

தாறுமாறு வாகனங்கள் தடுமாறும்

எரியாத விளக்குவெள்ளியங்காடு, 60 அடி ரோடு, தணிகை வில்லா சந்திப்பு முன் தெருவிளக்கு, ஆறு மாதமாக எரிவதில்லை.- சண்முகம், வெள்ளியங்காடு. (படம் உண்டு)மின் கம்பம் இடையூறுதாராபுரம் ரோடு, அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும்.- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)முளைத்த கிளைகள்திருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகர் நால் ரோடு சந்திப்பு தண்ணீர் டேங்க்கை சுற்றி மரக்கிளைகள் முளைத்துள்ளது. மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.- ரஞ்சித், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)குப்பை தேக்கம்அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், ஆஷர் நகர் இரண்டாவது வீதியில், மூன்று மாதமாக குப்பை அள்ளவில்லை. தேங்கியுள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.- ஆண்டனி ராஜ், ஆஷர் நகர். (படம் உண்டு)மண்டிய புதுார்பெருமாநல்லுார், பொடாரம்பாளையம் - காளிபாளையம் வழி, ரோஜா கார்டனில் சாலையின் இருபுறமும் முட்புதர் மண்டி காணப்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.-- குட்டிகுமார், பொடாரம்பாளையம். (படம் உண்டு)கொசுத்தொல்லைசெங்குந்தபுரம் முதல் வீதி, நுகர்வோர் கோர்ட் எதிர் வீதியில் தேங்கியுள்ள குப்பையால், மழை பெய்யும் போது, கொசுத்தொல்லை அதிகமாகிறது. குப்பை அள்ள வேண்டும். கொசு மருந்து தெளிக்க வேண்டும்.- -சின்னச்சாமி, செங்குந்தபுரம். (படம் உண்டு)சாலை சேதம்அவிநாசி ரோடு, அம்மாபாளையம், காந்தி நகர், எஸ்.ஏ.பி., தியேட்டர் ஸ்டாப், பங்களா ஸ்டாப் சிக்னல்கள் முன் சாலை சேதமாகி, வாகன ஓட்டிகள் விழும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதே இல்லை.- வேலு, காந்தி நகர். (படம் உண்டு)வீணாகும் தொட்டிதிருப்பூர், கே.செட்டிபாளையம், வெங்கட்ரமண பெருமாள் கோவில் முன்புறம், மாநகராட்சி புதிய குப்பை தொட்டி வீணாகி கிடக்கிறது; சீரமைத்து, பயன்படுத்த வேண்டும்- கோபாலாகிருஷ்ணன், கே.செட்டிபாளையம். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைதிருப்பூர், வளம் பாலம், ஏற்றுமதியாளர் சங்க ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- சந்திரசேகரன், காயிதே மில்லத் நகர். (படம் உண்டு)திருப்பூர், கோர்ட் வீதி - சபாபதிபுரம் செல்லும் ரோட்டில், ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு வேகத்தடை அருகே சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். தார் ஊற்றி, குழியை மூட வேண்டும்.- ராம்குமார், சபாபதிபுரம். (படம் உண்டு)தாறுமாறு வாகனங்கள்திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவில் முன் டூவீலர், கார்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பிற வாகனங்கள் செல்ல வழியில்லாத சூழல் ஏற்படுகிறது. பார்க்கிங்கை போலீசார் முறைப்படுத்த வேண்டும்.- வெங்கடேஷ், திருப்பூர். (படம் உண்டு)காத்திருக்கும் அபாயம்திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்புறம் நிறுவப்பட்டுள்ள மையத்தடுப்பு வாகனம் மோதி வளைந்து, அவ்வழியாக செல்வோரை கிழித்து விடும் நிலையில் உள்ளது. ஆபத்து நேரிடும் முன் சீரமைக்க வேண்டும்.- திவாகர், மங்கலம் ரோடு. (படம் உண்டு)ரியாக் ஷன்சுத்தமானதுதிருப்பூர், பத்மாவதிபுரம் பகுதியில் குப்பை தேங்கியிருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது.- அசோக்குமார், பத்மாவதிபுரம். (படம் உண்டு)புதர் மாயம்திருப்பூர், 13 வது வார்டு, காந்திநகர், 80 அடி ரோட்டில், மின்கம்பங்களை சுற்றி முட்புதர் மண்டியிருப்பதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. சுத்தம் செய்யப்பட்டுள்ளது.- சிவசுப்ரமணியம், காந்திநகர். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை