உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உருவாகிறது வெள்ளகோவில் தாலுகா! பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது

உருவாகிறது வெள்ளகோவில் தாலுகா! பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது

திருப்பூர்: நிர்வாக வசதிக்காக, தாராபுரம் மற்றும் காங்கயம் தாலுகாக்களை பிரித்து, வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்க, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.கடந்த, 2014ல், திருப்பூர் தாலுகா என்பது, வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டது. அவிநாசியுடன் இருந்த ஊத்துக்குளியை பிரித்து, தனி தாலுகா ஏற்படுத்தப்பட்டது. கடந்த, 10 ஆண்டு களாகவே, வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்ட தனி தாலுகா உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, காங்கயம் மற்றும் தாராபுரம் மக்களிடையே இருந்து வருகிறது.நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெள்ளகோவிலை தலைமையிடமாக கொண்ட தாலுகா உருவாக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள் வாயிலாக, தேவையான பரிந்துரைகளும், உத்தேச அறிக்கையுடன் கருத்துரு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளகோவில் தாலுகா

காங்கயம் தாலுகாவில் உள்ள வெள்ளகோவில் உள்வட்டத்தில், 16 வருவாய் கிராமங்கள் உள்ளன; இனி, வெள்ளகோவில் மற்றும் முத்துார் என, இரண்டு உள்வட்டமாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில், பச்சாபாளையம், சேனாபதிபாளையம், உத்தமபாளையம், லக்குமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி கிராமங்கள் வெள்ளகோவில் உள்வட்டத்தில் அமையும். இத்துடன், தாராபுரம் தாலுகா, சங்கராண்டம்பாளையம் உள்வட்டத்தில் இருக்கும் புங்கந்துறை, மாம்பாடி கிராமங்கள் இணைக்கப்படுகிறது.முத்துார், சின்னமுத்துார், ஊடையம், மங்களப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டவலசு, வள்ளியரச்சல், வீரசோழபுரம், ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் கிராமங்களுடன் முத்துார் உள்வட்டம் அமைக்கப்பட உள்ளது.

30 வருவாய் கிராமங்கள்

திருப்பூர் மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளாக, மூன்று வருவாய் கோட்டங்கள் மற்றும் ஒன்பது தாலுகாக்களுடன் இயங்கி வருகிறது. தாராபுரம் கோட்டத்தில், புதிதாக வெள்ளகோவில் தாலுகா உருவாக்கப்படுகிறது. அதாவது, மூன்று உள்வட்டம், 30 வருவாய் கிராமங்களுடன் கூடிய தாலுகாவாக அமைக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.n தாராபுரம் தாலுகாவில் இருக்கும், கன்னிவாடி உள்வட்டம், வெள்ளகோவில் தாலுகாவுடன் இணைக்கப்படுகிறது. முளையாம்பூண்டி, புதுப்பை, எரிசனம்பாளையம், தட்டாரவலசு, கன்னிவாடி, புஞ்சை தலையூர், நஞ்சை தலையூர், சேனாபதிபாளையம், வேளாம்பூண்டி, சுண்டக்காம்பாளையம், அரிக்காரன் வலசு, எடக்கல்பாடி கிராமங்கள், கன்னிவாடி உள்வட்டத்தில் உள்ளன.n தாராபுரம் தாலுகா, மாவட்டத்தில் மேற்கு எல்லை துவங்கி, கிழக்கு எல்லை வரை, கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்ட எல்லைகளை தொட்டபடி நீண்டு காணப்படும் பெரிய தாலுகா; மொத்தம், ஏழு உள்வட்டம், 71 கிராமங்கள் உள்ளன. வெள்ளகோவில் தாலுகா உருவாகும் போது, வருவாய் கிராமங்கள் எண்ணிக்கை, 57 ஆக இருக்கும்.n காங்கயம் தாலுகா, நான்கு பிர்கா மற்றும் 44 கிராமங்களுடன் இயங்கி வருகிறது. காங்கயம் (10 வருவாய் கிராமங்கள்), ஊதியூர் (8), நத்தக்காடையூர் (10), வெள்ளகோவில் (16) ஆகிய நான்கு உள்வட்டங்கள் உள்ளன. புதிதாக வெள்ளகோவில் தாலுகா உருவாகும் போது, வருவாய் கிராமங்கள், 28 ஆக குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி