உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரையிறுதியில் விக்டஸ், ஜி.ஆர்., அணிகள்

அரையிறுதியில் விக்டஸ், ஜி.ஆர்., அணிகள்

திருப்பூர்: 'நிப்ட் டீ' பிரீமியர் லீக் அரையிறுதிக்கு, விக்டஸ் டையிங், ஜி.ஆர். கார்மென்ட்ஸ் ஈகிள் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான 'நிப்ட் டீ' பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர், முதலிபாளையம் 'நிப்ட் டீ' கல்லுாரி மைதானத்தில் இரு மாதங்களாக நடந்து வருகிறது. 'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, 'நிப்ட் டீ' கல்லுாரி கிரிக்கெட் தொடரை நடத்திவருகின்றன. நேற்று இரண்டாவது சுற்று காலிறுதி போட்டிகள் நடந்தது. ராம்ராஜ் காட்டன் அணி - விக்டஸ் டையிங் அணி இடையேயான போட்டியை, நிப்ட்- டீ கல்லுாரி டீன் சம்பத் துவக்கி வைத்தார். முதலில் பேட் செய்த விக்டஸ் டையிங் 20 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 131 ரன் எடுத்தது. கேப்டன் சசிவில்லர்ஸ், 42 பந்துகளில், 52 ரன்; மகேந்திரமணி 32 ரன் எடுத்தனர். ராம்ராஜ் காட்டன் அணி, 15.5 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 83 ரன் மட்டுமே எடுத்தது. மகேந்திரமணி, 2.5 ஓவர் மட்டும் வீசி, எட்டு ரன்கள் கொடுத்து, 4 விக்கெட் கைப்பற்றினார். 48 ரன் வித்தியாசத்தில் விக்டஸ் டையிங் அணி வெற்றி பெற்றது. மகேந்திரமணி ஆட்டநாயகனாக தேர்வானார். மற்றொரு காலிறுதியில், ஜி.ஆர். கார்மென்ட்ஸ் ஈகிள் - டெக்னோ ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜி.ஆர். கார்மென்ட்ஸ் அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 159 ரன் குவித்தது. முகமது இத்ரிஸ், 21 பந்துகளில், 35 ரன் எடுத்தார். இலக்கை விரட்டிய, டெக்னோ ஸ்போர்ட்ஸ் அணி, 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 78 ரன் மட்டுமே எடுத்தது. இதில், 4 ஓவர் வீசி, 8 ரன் மட்டுமே கொடுத்து, முகமது இத்ரிஸ், ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ஜி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் அணி, 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முகமது இத்ரிஸ் ஆட்டநாயகனாக தேர்வானார். டெக்னோ ஸ்போர்ட்ஸ் உற்பத்திப்பிரிவு மேலாளர் லோகேஷ், சி.ஆர்., கார்மென்ட்ஸ் வர்த்தகப் பிரிவு மேலாளர் ராக்கியப்பன் ஆகியோர் ஆட்டநாயகன் விருதுகளை வழங்கினர். ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங், குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய இரு அணிகள் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், விக்டஸ் டையிங், ஜி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் ஆகிய இரு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வரும், நவ. 2ல் அரையிறுதி போட்டியும், நவ. 9ல் இறுதி போட்டியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ