உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோகோ போட்டியில் வித்யா விகாஸ் அபாரம்

கோகோ போட்டியில் வித்யா விகாஸ் அபாரம்

திருப்பூர், ஆக. 22– திருப்பூர், தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், 14 வயதிற்குட்பட்டோர் கோகோ போட்டியில் வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியுடன் மோதி அபார வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். கோப்பையை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால், பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தார். தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி, நிர்வாக அலுவலர் சிவகுருநாதன் மற்றும் முதல்வர் தனபாக்கியம் ஆகியோர் பாராட்டினர். குறுமைய அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். ––– கோகோ போட்டியில் வென்ற வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ