உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யா விகாஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வித்யா விகாஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி கூறியதாவது:பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 95 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பொது தேர்வில் 67 பேர் 400 மதிப் பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.மாணவர் குகன் கார்த்திக் 494 மதிப்பெண்ணும்; சாய்ராம் 492 மதிப்பெண்ணும், சர்வேஷ் 490 மதிப்பெண்ணும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பத்து பேர் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மாணவர்களின் வெற்றிக்கு பள்ளி முதல்வர் தனபாக்கியம் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட ஆசிரியர் குழுவின் சிறப்பான செயல்பாடுகளும், அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித்தல் பணியும் காரணம். மாணவர்களை சிரமப்படுத்தும் வகையிலான சிறப்பு வகுப்புகள் இல்லாமல், சீரிய முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும், குறைந்த கல்விக் கட்டணமும் இப்பள்ளியின் சிறப்பு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை