உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பள்ளியில் வித்யாரம்ப நிகழ்ச்சி

கே.எம்.சி., பள்ளியில் வித்யாரம்ப நிகழ்ச்சி

திருப்பூர் : திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.நவராத்திரியை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் கொலு அமைத்து ஒன்பது நாட்களும் சிறப்பு வழிபாடு நடந்தது. பள்ளியில் மாணவர் சேர்க்கையில் புதிதாக சேர்ந்த மழலையர் மற்றும் மாணவ, மாணவிகளை நவராத்திரி கொலுவுக்கு முன் பெற்றோருடன் அமர வைத்து, தானியத்தில் 'அ...ஆ...' எழுத்துக்களை எழுத பழகும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.அதன்பின், பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பள்ளி தாளாளர் மனோகரன் விளக்கினார். பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி அம்மாள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். மேலும், பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, 'கற்றல் இனிது' என்பது குறித்து பேசி, மழலைகளையும், மாணவர்களையும் பாராட்டினார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி