உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலை சிறந்த மாணவர்களை உருவாக்கும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

தலை சிறந்த மாணவர்களை உருவாக்கும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி செயலாளர் சிவபிரியா மாதேஸ்வரன், தங்கள் பள்ளியின் சிறப்புகள் குறித்து கூறியதாவது:பள்ளியில், 2015ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை, 10 மற்றும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததுடன், நமது மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சென்னை, கோவை, தேனி போன்ற பகுதியிலுள்ள சிறந்த மருத்துவ கல்லுாரிகளிலும், சென்னை ஐ.ஐ.டி., - திருச்சி என்.ஐ. டி., அமிர்தா, வி.ஐ.டி., எஸ்.ஆர்.எம்., போன்ற பொறியியல் கல்லுாரிகளில் இணைந்துள்ளனர்.கலை மற்றும் அறிவியல் படித்த மாணவர்கள் கல்வி தரத்தில் முதல், 10 இடங்கள் வகிக்கும் மணிபால், கிறிஸ்ட், பி.எஸ்.ஜி., ஜெயின் பல்கலையிலும் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். கடந்த, 9 ஆண்டுகளாக, 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள தொடக்கநிலை மாணவர்களுக்கு, 'டெக்னோ எடுக் கிட்' வாயிலாகவும், 'ரோபோடிக்ஸ்' வாயிலாகவும், நவீன தொழில்நுட்பம் குறித்த பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, ஐஐடி., - ஜேஇஇ., - நீட் போன்ற வகுப்புகள், டிஐஎம்இ., நிறுவனத்தின் அடித்தள கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பாட திட்டங்கள் வாயிலாக, மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்கின்றனர்.பள்ளியின் கல்வித்தரத்தை உலகளவில் வெளிப்படுத்த சர்வதேச தர வரிசை நிபுணர் குழு அங்கீகாரம் பெற்ற க்யூ.எஸ்., தரவரிசை, க்யூ.எஸ்.ஐ.கேஜ் என்ற அமைப்பின் தரவரிசை பட்டியலில் பதிவு செய்யப்பட்டு 'கோல்டு ரேட்டிங்' பெற்றுள்ளது, பெருமைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் கற்றல், கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.மாணவர்களுக்கு, வெறும் கல்வியை மட்டும் கற்பிக்காமல் அவர்களின் தனித்திறமையை வெளிக் கொணரும் வகையில் இசை, நடனம், கராத்தே போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது.விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், தனித்தனியாக பெரியளவில், கால்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. 2024 -25ம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி