ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் இன்று விஜயதசமி மாணவர் சேர்க்கை
திருப்பூர் : விஜயதசமியையொட்டி, திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இன்று நடக்கிறது.பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியசாமி, முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ''இந்தாண்டிற்கான அறிவியல் நாடகப் போட்டியில் மாவட்ட அளவில் எங்கள் பள்ளி மாணவர்கள் முதன்மை பெற்று, மாநில அளவில் கலந்துகொள்ள உள்ளனர். 2024-25ம் கல்வியாண்டுக்கான பிரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு குழந்தைகளுக்கு விஜயதசமி பள்ளிச் சேர்க்கை இன்று(12ம் தேதி) காலை 10:30 மணி முதல் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லா போக்கு வரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.