மாணவரை சாதிக்க வைக்கும் விகாஸ் வித்யாலயா பள்ளி
திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த, விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா ெமட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, 152 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி, லக் ஷிதா, 497 மதிப்பெண், பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார். இதுதவிர, தீபிகா, மேகா மற்றும் பிரதீக் ஷா ஆகிய மூன்று பேர் 495 மதிப்பெண்ணுடன் பள்ளியில் இரண்டாமிடமும், கிரிதர் மற்றும் நித்தின் ஆகியோர் 491 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும் பெற்றனர்.இப்பள்ளியில் ஒரு மாணவி, ஆங்கில பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் 8 பேர்; சமூக அறிவியலில் 5 பேர் 100 மதிப்பெண்ணும், தமிழில் ஒரு மாணவர் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, விகாஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களின் சேர்மன் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் அனிதா உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்தனர்.சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.