மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
27-Apr-2025
ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
21-Apr-2025
பல்லடம், ; ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து, பி.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வடுகபாளையம்புதுார் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி கணபதிபாளையம் ஊராட்சிக்கு கூடுதல் பொறுப்பு. சுக்கம்பாளையம் ஊராட்சி செயலர் சுரேஷ், வடுகபாளையம் புதுாருக்கும், புளியம்பட்டி செயலர் கவிதா, சித்தம்பலத்துக்கும், சித்தம்பலம் செயலர் புவனேஸ்வரி, கரடிவாவிக்கும், அங்கிருந்த ராஜாமணி, புளியம்பட்டிக்கும், மாணிக்கபுரம் செயலர் காளிசாமி, சுக்கம்பாளையம் கூடுதல் பொறுப்புக்கும், பருவாய் மணிகண்டன், இச்சிப்பட்டிக்கு கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில், ''மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கணபதிபாளையம் ஊராட்சி செயலாளர் பிரபு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றி வந்ததன் காரணமாகவும், ஊராட்சி செயலர்கள் சிலர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.
27-Apr-2025
21-Apr-2025