உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோய் தடுப்பு பணியில் முக்கியத்துவம் அளிப்பதில்லை; கிராம மக்கள் புகார்

நோய் தடுப்பு பணியில் முக்கியத்துவம் அளிப்பதில்லை; கிராம மக்கள் புகார்

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. தற்போது பருவநிலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலையில் வெப்பமாகவும் சிறிது நேரத்தில் மழை பெய்வதுமாகவும் மாறிமாறி உள்ளது. இவ்வாறு பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதால், நோய்தொற்றுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கொசுப்புழு உற்பத்தியும் அதிகரிப்பதாக மக்கள் கூறுகின்றனர். காலை நேரங்களிலும் குடியிருப்புகளில் கொசுத்தொல்லை அதிகரிப்பதால், கிராம மக்கள் பலருக்கும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அடிக்கடி ஏற்படுகிறது. சுகாதாரத்தை மேம்படுத்தவும், நோய்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என, கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். கிராம மக்கள் கூறியதாவது: கிராமங்களில் நோய்தடுப்பு நடவடிக்கைகள் சமீப காலமாக முடங்கியுள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் பொதுவான மருத்துவ முகாம்கள் கூட போடப்படுவதில்லை. குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒன்றிய நிர்வாகம் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை