உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிதிலமடைந்த மின்கம்பம் அச்சத்தில் கிராம மக்கள்

சிதிலமடைந்த மின்கம்பம் அச்சத்தில் கிராம மக்கள்

உடுமலை, ; கணக்கம்பாளையம் ஊராட்சி ஓலப்பாளையம் பகுதியில், சிதிலமடைந்த மின்கம்பங்களை அகற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கணக்கம்பாளையம் ஊராட்சி எஸ்.வி., புரம் பகுதியில் ஓலப்பாளையம் பகுதி உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பங்களின் அடிப்பகுதி முழுவதும் சிதிலமடைந்துள்ளது.மின் கம்பங்கள் தொடர்ந்து இடிந்துகொண்டே வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் வீதியில் நடப்பதற்கு தயங்குகின்றனர். குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதற்கும் மனமில்லாமல், எந்த நேரத்திலும் மின் கம்பங்கள் விழுந்துவிடும் என பீதியில் உள்ளனர்.அதிக காற்றடிக்கும் நேரங்களில் இப்பிரச்னை அப்பகுதியினருக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மின் விபத்துகள் ஏற்படும் முன்பு, மின்வாரியத்துறையினர் உடனடியாக சிதிலமடைந்த அனைத்து மின்கம்பங்களையும் அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை