மேலும் செய்திகள்
நாளை விஷ்ணுபதி புண்யகால பூஜை
15-Nov-2024
திருப்பூர் ; விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஒவ்வொரு ஆண்டும், நான்குமுறை விஷ்ணுபதி புண்ணியகாலம் நிகழ்கிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் மாறும் போது, சூரிய மாற்றத்தால் விஷ்ணுவின் தெய்வீக ஆற்றல் இணைந்து ஆன்மிக சக்தி பெருகுவதாக ஐ தீகம்.அதன்படி, நேற்று முன்தினம், விஷ்ணுபதி புண்ணியகாலம் அனுசரிக்கப்பட்டது. காலை, 6:40 முதல், காலை, 10:30 மணி வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொடுவாய் விண்ணளந்த பெரியபெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
15-Nov-2024