விவேகானந்தா அகாடமி மாணவர்கள் அபாரம்
திருப்பூர்; வினாடி - வினா போட்டியில் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மூன்றாமிடம் பிடித்தது. கல்வி மற்றும் நுண்ணறிவை வளர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டம், 'சைனிக்' பள்ளி சார்பில், 'பிரஜ்னா - 2025' என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வினாடி - வினா, ஐடியாதான், கட்டுரை எழுதுதல், குறும்படம் தயாரித்தல், போட்டோ எடுத்தல், படம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகளில் காங்கயம், விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியின், 21 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வினாடி- வினா போட்டியில், பிளஸ்1 தான்யா மற்றும் ஸ்ரீமதிவதனி மூன்றாமிடம் பிடித்தனர். இப்போட்டிகளில் பங்கேற்ற, 21 மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பரிசு தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரையும், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பாராட்டினர்.