வாலிபால் அணி தேர்வு; திறன் காட்டிய வீரர்கள்
திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், மாவட்ட வாலிபால் அணித்தேர்வு, நேற்று நடந்தது. மாநில வாலிபால் கழக துணை சேர்மன் ரங்கசாமி தேர்வு போட்டியை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 46 பேர் பங்கேற்றனர்.சிறப்பாக திறமை காட்டிய, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், வரும் நவ., 2 முதல், 5 வரை மூன்று நாட்கள் வேலுாரில் நடைபெற உள்ள மாநில ஆண்கள் வாலிபால் போட்டியில், திருப்பூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, அக்., 28 முதல் நவ., 1 வரை காங்கயம் இ.பி.இ.டி., கல்லுாரியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.