உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளியில் அடிப்படை வசதி தன்னார்வ நிறுவனம் முயற்சி

அரசு பள்ளியில் அடிப்படை வசதி தன்னார்வ நிறுவனம் முயற்சி

திருப்பூர் : அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில், விழா திருப்பூரில் நடைபெற்றது.என்.எம்.சி.டி., அறக்கட்டளை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வகையில், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில், 20 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா ஆர்.கே., ஓட்டலில் நடந்தது.தேர்வு செய்யபட்டுள்ள இப்பள்ளிகளில் குடிநீர் வசதி, கை கழுவும் வசதி, கழிப்பிடம், வீட்டுத்தோட்டம் அமைத்தல், வளர் இளம்பருவ மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்தல்; பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி; பெற்றோர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிக்கான நிதி உதவி ஆகியன செயல்படுத்தப்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.துவக்க விழாவில், என்.எம்.சி.டி., இயக்குநர் சங்கரநாராயணன் வரவேற்றார். மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மெஜஸ்டிக் கந்தசாமி உட்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். செல்வதேவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை