உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசை காட்டிலும் தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு அதிக உதவி

அரசை காட்டிலும் தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு அதிக உதவி

பல்லடம்; பல்லடம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கவிதாமணி, துணை தாசில்தார் அருள்குமரன், டாக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுபா வரவேற்றார். பல்லடம் அரசு தலைமை மருத்துவர் ராமசாமி பேசியதாவது: அரசு மருத்துவமனையின் குறைபாடுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, இங்கு அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. நோயாளிகள் ஒவ்வொருவரையும் குணப்படுத்தி அனுப்புவதே எங்கள் கடமை. அரசு உதவியதை விட, தன்னார்வலர்கள் அதிக அளவில் மருத்துவமனைக்கு உதவியுள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனை என்ற தேரை, உள்ளூர் மக்களாகிய நீங்கள் தான் இழுத்து செல்ல வேண்டும். மாதம், 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், துாய்மை பணிக்கு ஆட்கள் வருவதில்லை. எனவே, ஆட்கள் கிடைக்க உதவ வேண்டும். மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தி, முழு முயற்சி எடுப்பதில், தன்னார்வலர்களின் பங்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி தலைவர் கவிதாமணி, ஈகை அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயன், ஜவுளி உற்பத்தியாளர் நடராஜ் ஆகியோர், முதல் கட்டமாக, தலா ஒரு பணியாளரின் மாத சம்பளத்தை ஏற்பதாக உறுதியளித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும் இதில் கைகோர்ப்பதாக உறுதியளித்தனர். --- பல்லடம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விரைவில் புதிய பிரசவ வார்டு தொடர்ச்ச்யாக அரசுக்கு முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு சிகிச்சைக்கான வசதி கிடைத்துள்ளது. அதுபோல், விரைவில், லிப்ட் வசதியுடன் கூடிய பிரசவ வார்டு அமைய உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் வேலை பார்ப்பதால், அதில், நகராட்சி நிர்வாகம் தலையிட முடியாது. இதுதவிர, பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது. இருப்பினும், என்னால் இயன்ற அளவு மருத்துவமனைக்கு உதவுவேன். - -கவிதாமணி பல்லடம் நகராட்சி தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை