மேலும் செய்திகள்
வாக்காளராக பெயர் சேர்க்க 32,401 பேர் விண்ணப்பம்
02-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது.பெயர் சேர்ப்பதற்காக 32,401; பெயர் நீக்கத்துக்கு 12,847; பல்வேறுவகை திருத்தங்களுக்காக 30,402; வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்பதற்காக இரண்டு என, மொத்தம் 75, 652 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, விண்ணப்பங்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாக்காளர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா என கள ஆய்வு மூலம் உறுதிப்படுத்துகின்றனர். அதனடிப்படையில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளவோ; விண்ணப்பங்களின் தவறுகள் இருப்பின் நிராகரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ், கணக்கம்பாளையத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் விண்ணப்பம் சரிபார்ப்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். பி.எல்.ஓ.,க்களின் களப்பணிகள் வரும், 24ம் தேதியுடன் முடிவடைந்து, ஜன., 6ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தில், பெயர் சேர்ப்பதற்காக 32,401; பெயர் நீக்கத்துக்கு 12,847; பல்வேறுவகை திருத்தங்களுக்காக 30,402; வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்பதற்காக 2 என, மாவட்டத்தில் மொத்தம் 75, 652 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.
02-Dec-2024