உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பவர்டேபிள் நிறுவனங்களுக்கு  15 நாளில் கூலி உயர்வு

பவர்டேபிள் நிறுவனங்களுக்கு  15 நாளில் கூலி உயர்வு

திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) பொது செயலாளர் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒப்பந்த கூலி கிடைக்காதது குறித்து, பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம், அக்., 30ல் கடிதம் வழங்கியது. அதனை தொடர்ந்து, நவ., 1ம் தேதி சைமா சங்க உறுப்பினர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பி, ஒப்பந்த கூலி உயர்வு 7 சதவீதத்தை உடனடியாக வழங்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பவர் டேபிள்' சங்கத்துக்கும், இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. உறுப்பினர்களில் பெரும்பாலானோர், கூலியை உயர்த்தி வழங்கியுள்ளனர். கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி அறிவுறுத்தியுள்ளோம். விரைவில், கூலி உயர்வை நடைமுறைப்படுத்த உள்ளனர். ஒப்பந்தத்தை மீறும் வகையில், பவர்டேபிள் சங்கத்தினர், தன்னிச்சையாக வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது, எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எத்தகைய பிரச்னையாக இருந்தாலும், கூட்டுக்கமிட்டி வாயிலாக பேசி தீர்க்கலாம் என்று ஒப்பந்தத்தில் முடிவு செய்துள்ள நிலையில், இதுபோன்ற தன்னிச்சையான முடிவால், தொழிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கும். பனியன் தொழிலில் ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ளன; தொழில்கள், வடமாநிலங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. தொழிலை தக்கவைக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 'பவர்டேபிள்' சங்கத்தின் தன்னிச்சையான போக்கு, பின்னலாடை தொழிலில் எதிர்காலத்தை மேலும் பாதிக்கும். இனிவரும் நாட்களில், பவர்டேபிள் சங்க நிர்வாகிகள், சைமா சங்கத்தை உரிய முறையில் தொடர்புகொண்டு, தங்களது கோரிக்கையை முன்வைத்தால் மட்டுமே, 'சைமா' சங்கம் அவர்களுடன் பயணிக்கும். கடந்த, 10ம் தேதி, சைமா சங்கத்தில், கூலி உயர்வு வழங்காத நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில், 15 நாட்களுக்குள் பவர்டேபிள் சங்க நிர்வாகிகளுடன் பேசி, கூலி உயர்வை வழங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில், 'சைமா' துணை தலைவர் பாலசந்தர், செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறும் வகையில், பவர்டேபிள் சங்கத்தினர், தன்னிச்சையாக வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது, எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எத்தகைய பிரச்னையாக இருந்தாலும், கூட்டுக்கமிட்டி வாயிலாக பேசி தீர்க்கலாம் என்று ஒப்பந்தத்தில் முடிவு செய்துள்ள நிலையில், இதுபோன்ற தன்னிச்சையான முடிவால், தொழிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை