மேலும் செய்திகள்
இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை
28-Sep-2025
பொங்கலுார்; பொங்கலுார், பல்லவராயன்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஐ.டி.பி.எல். நிறுவனத்துக்கு எதிராக நடந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், காங்கயம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அ.தி.மு.க. பொங்கலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் முத்து விஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலாளர் பரமசிவம் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
28-Sep-2025