உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கைக்குழந்தையுடன் பெண் காத்திருக்க வைக்கப்பட்டாரா?

கைக்குழந்தையுடன் பெண் காத்திருக்க வைக்கப்பட்டாரா?

பல்லடம்: பல்லடம் நகர காங்., கட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய மனு:மார்ச் 25ம் தேதி, மகளின் திருமண பதிவுக்காக, பல்லடம் சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். கைக்குழந்தையுடன், மகள் வந்திருந்தார். திருமண பதிவுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களைக் கேட்டு அலைக்கழித்தனர். நீண்ட காத்திருப்புக்கு பின், இரவு 8:00 மணியளவில்தான் பதிவு செய்யப்பட்டது.கைக்குழந்தையுடன் வரும் ஒரு தாயை மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதால், அந்த தாய்க்கு எவ்வளவு சிரமம் ஏற்படும் என்பதை உணர வேண்டும். பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில், இதுபோல், பொதுமக்களை காத்திருக்க வைப்பது, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பதிவு தாமதமானது குறித்து உரிய விளக்கம் தராவிட்டால், பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பல்லடம் சார் பதிவாளர் உமாமகேஸ்வரி யிடம் கேட்டதற்கு, ''ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் சரி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துவோம். ஆவணங்களை எடுத்து வர தாமதம் ஏற்பட்டிருக்கலாம். யாரையும் காத்திருக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இதுகுறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ