மேலும் செய்திகள்
நிலத்தடி நீர் மட்டம் உயரணும்; திட்டக்குழு ஆலோசனை
15-Nov-2024
திருப்பூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மேம்படுத்துவது குறித்து, நீர் செறிவூட்டும் திட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்தது.அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாடு செய்யும் வகையில், நீர் நிலைகள், ஆழ்துளை, திறந்த நிலை கிணறுகள் ஆகியவற்றில் நீர் செறிவூட்டப்படும். நீர் வற்றியதால் பயன்பாட்டில் இல்லாத, 1,055 திறந்த நிலை கிணறுகள், 1,155 ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றில் நீர் கொடுதிறன் அதிகரிக்க நீர் செறிவூட்டப்படும். செறிவூட்ட செய்ய இயலாத வகையில் உள்ள கிணறுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்'' என்றார். பின் மாவட்டத்தில் மனைப்பட்டா வழங்கும் பணிகள் நிலை குறித்து வருவாய் துறையினருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
15-Nov-2024