உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யலில் நீர் வரத்து அதிகரிப்பு; பாலம் மீது போக்குவரத்து தடை

நொய்யலில் நீர் வரத்து அதிகரிப்பு; பாலம் மீது போக்குவரத்து தடை

திருப்பூர்; நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியது. இதையடுத்து, அணைப்பாளையம் தரைப் பாலம் வழியாக செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் சற்று நீர் வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூர் - மங்கலம் ரோட்டை, பாரப்பாளையம் பகுதியிலும், காலேஜ் ரோட்டை அணைப்பாளையம் பகுதியிலும் இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கில் தரைப்பாலம் உள்ளது.இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது நொய்யல் ஆற்றில் நீர் வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, பாலத்தின் கீழ் பகுதியைத் தொட்டபடி ஆற்றில் நீர் பாய்ந்து சென்றது. மெல்ல, மெல்ல நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் பாலத்தின் மேற்புறத்தில் நீர் பாய்ந்து செல்லும்.இந்த பாலம் வழியாக நேற்று மாலை முதல் வாகனப் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். பாலம் வழியாக வாகனங்கள் செல்லாமல் தவிர்க்க தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ