உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊழியர் போர்வையில் குடிநீர் மீட்டர் லபக்

ஊழியர் போர்வையில் குடிநீர் மீட்டர் லபக்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு கவுன்சிலர் பெனாசீர் கூறியதாவது: மாநகராட்சியின் 50, 59 ஆகிய வார்டுகளில், இரு அடையாளம் தெரியாத நபர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறி பல வீடுகளில் சென்று குடிநீர் குழாய் இணைப்புகளை ஆய்வு செய்வது போல் நடித்துள்ளனர். என்.பி. லே அவுட், கரட்டாங்காடு ஆகிய பகுதிகளில் நான்காவது குடிநீர் திட்டத்தில் வழங்கிய குழாய் இணைப்புகளில் உள்ள மீட்டர்களை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். மீட்டர் பழுது பார்க்க வேண்டியுள்ளது; புதிய மீட்டர் கொண்டு வந்து பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அந்த நபர்களுக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தமில்லை. எங்கள் வார்டு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் யாராவது புதிய மற்றும் அறிமுகமில்லாத ஆட்கள் வீடுகளுக்கு வந்தால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி