உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

உடுமலை; ஜல்லிபட்டி பகுதியில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து நீண்ட காலமாகியும் சீரமைக்கப்படவில்லை.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து கிராமங்களின் குடிநீர் தேவைக்காக கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், மடத்துக்குளம் ஒன்றியத்துக்கான திட்டத்தின் பிரதான குழாய், ஜல்லிபட்டி நால்ரோடு சந்திப்பு அருகே உடைந்து நீண்ட காலமாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி அப்பகுதி முழுவதும் தேங்கி நிற்கிறது.மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரதான குழாய் உடைப்பு உடனடியாக சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை