மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்
24-Nov-2024
பொங்கலுார்; பொங்கலுார், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.பல்லடம் எம்.எல்.ஏ., சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 13 லட்சம் ரூபாய் இதற்காக செலவிடப்படுகிறது. இதற்கான பூமி பூஜை பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமையில் நடந்தது.உகாயனுார் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, வடக்கு அவிநாசி பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், ஊராட்சி துணைத் தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, வாவிபாளையம் ஊராட்சி, பழனிக் கவுண்டம்பாளையம் கான்கிரீட் சாலை, வடமலைபாளையத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, புதிய ஆழ்குழாய் கிணறு, மாதப்பூர் ஊராட்சி, சின்னிய கவுண்டம்பாளையம் புதுார் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வடமலைபாளையம் ஊராட்சி தலைவி மேனகா சுரேஷ்மூர்த்தி, பொங்கலுார் ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
24-Nov-2024