மேலும் செய்திகள்
பொதுமக்கள் கோரிக்கை
25-Oct-2024
குறைந்த நேர இடைவெளியில் பஸ் இயக்க வலியுறுத்தல்
07-Oct-2024
உடுமலை; உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், பயணியர் பெரிதும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
25-Oct-2024
07-Oct-2024