மேலும் செய்திகள்
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
06-May-2025
திருப்பூ; திருப்பூர் தொழிலாளர் நல அலுவலகத்தில், 'பேப்ரிக்கேஷன்' மற்றும் 'நிட்டிங்' தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தொழிலாளர் உதவி கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கையை விளக்கினர்.நிறைவாக, இணை கமிஷனர் தலைமையில் கூட்டம் நடத்தி, சம்பள உயர்வு கோரிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும், அதற்கு பிறகு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., -சிட்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து, தொழிலாளர் துறை உதவி கமிஷனரிடம், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் அளித்துள்ள மனு:'நிட்டிங்' தொழிலாளர் நின்றுகொண்டே பணியாற்றுவதால், கால்வலியால் பாதிக்கப்படுகின்றனர்; கண் பார்வையும் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள, மூன்று வழிகாட்டுதலை பின்பற்றியே, குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், மனித தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.பெற்றோர் பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு ஆகிய அனைத்து விவரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணய செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
06-May-2025