அரசு பள்ளி குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம்
பல்லடம்: பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில், கே.எஸ்.கே., அறக்கட்டளை சார்பில், 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் விழா நடந்தது.பல்லடம் தபால் அலுவலக போஸ்ட் மாஸ்டர் சுரேஷ் தலைமை வகித்தார். கள்ளிப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். முன்னதாக, அறக்கட்டளை தலைவர் சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட, 50 பெண் குழந்தைகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், 250 ரூபாய் செலுத்துவதற்கான ஆணைகளை வழங்கினார். துணை போஸ்ட் மாஸ்டர் ரம்யா மற்றும் துத்தேரிபாளையம் தலைமை ஆசிரியர் வாசுகி, வலையபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்கனி மற்றும் ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.